உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டு 5 லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஜனார்த்தனன் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஜனார்த்தனனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி 5 லட்ச ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதை பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பின் எடுத்துச் செல்லுங்கள் என அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பொறுப்பாளர் ஏழுமலையிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.