மும்பை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரங்களாக ஜியோ சேவையில் பிரச்சினை ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாக ஜியோ இணைப்பில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அழைப்புகள் மேற்கொள்வதிலும், மற்ற எண்களிலிருந்து அழைப்புகள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. . எனவே, ஜியோ நிறுவனம் விரைவாக இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்திருக்கிறது.