Categories
அரசியல்

நீட் தேர்வு விவகாரம்…. முதலமைச்சர் ஏன் கையெழுத்து போடல?…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து விவாதித்து தெளிவான முடிவெடுப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 5-2-2022 இன்று காலை 11-00 மணி அளவில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் “தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை, நீட் தேவை இல்லை என்பது அதிமுகவின் கொள்கை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் சொன்னார். ஏன் கையெழுத்து போடவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |