Categories
சினிமா தமிழ் சினிமா

“சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய நடிகர் கமல்” …. வைரலாகும் புகைப்படம்…. என்ன படம்னு பாருங்க….!!!

“சில நேரங்களில் சில மனிதர்கள்” படத்தின் படக்குழுவினரை அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

நடிகர் அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன் உள்ளிட்டோரின் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்”. இத்திரைப்படத்தில் மேலும் ரித்விகா, அஞ்சு சூரியன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் என பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ராதன் இசையமைத்துள்ளார் மற்றும் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சேர்ந்து இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தனர்.

இந்தப்படம் தியேட்டரில் ரிலீஸாகி மக்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றது. இத்திரைப்படத்தை பலரும் பாராட்டி வந்த நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் அவர்களும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார். இச்சந்திப்பின் போது படக்குழுவினர் அனைவரும் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |