Categories
சினிமா

காஜல் அகர்வாலுக்கு வழங்கிய கோல்டன் விசா….  இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது.

அமீரக அரசு சென்ற 2019 ஆம் வருடம் விசா வழங்குவதில் சில மாற்றங்களை கொண்டு வந்ததுள்ளது. அதன் விளைவாக அமீரகத்தில் தங்க விரும்பும் விளையாட்டு வீரர்கள், சினிமா திரையுலகினர், பிரபலங்கள், வர்த்தகர்கள் முதலியோர் அமீரகத்தை சார்ந்த நிறுவனம் அல்லது தனிநபர் ஆதரவு இல்லாமல் ஐந்து முதல் பத்து வருடங்கள் வசிப்பதற்காக கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவை யார் வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்த கோல்டன் விசாவை ஏற்கனவே, பிரபலங்களான ஷாருக்கான், அமலாபால், சஞ்சய்தத், த்ரிஷா, மோகன்லால், மம்முட்டி, சானியா மிர்சா, பிரித்விராஜ் ,துல்கர் சல்மான், போனி கபூர், டோவினோ தாமஸ் உள்ளிட்டோருக்கு அமீரக அரசு வழங்கியிருந்தது. தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கும் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. காஜல் அகர்வால் தனது இணையதளப்பக்கத்தில் கோல்டன் விசாவை வழங்கியமைக்கு அதிகாரிகளுக்கு நன்றி கூறியுள்ளார்.

Categories

Tech |