Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நேரம் மாற்றம்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. ஆட்சியரின் தகவல்….!!

மதுபான கூடங்கள் செயல்படும் நேரம் மாற்றபட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ அதிகரித்து வந்ததை தடுப்பதற்காக அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது.

இதனையடுத்து தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்ற காரணத்தால் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளார். பின்னர் அதன்படி இம்மாவட்டத்தில் இயங்கி வருகின்ற அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |