Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!”…. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு….!!!!

பெரம்பலூரில் கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர் பதவியில் நீடித்து வந்த கண்ணம்மாள் என்பவர் 2005-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பின்னர் தனக்கு பணியை பணிவரன் செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கினை விசாரித்த ஹைகோர்ட் அவருடைய பணியை வரன்முறை செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால் ஊதிய பாக்கி மற்றும் ஊதிய உயர்வை தர முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை 2008-ல் அறிவித்துள்ளது.

இதனை எதிர்த்து கண்ணம்மாள் மறுபடியும் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அப்போது கண்ணம்மாள் இளநிலை உதவியாளராக பணியாற்றிய போது பணி வரன்முறைபடுத்தப்படவில்லை. அதேபோல் தமிழ் ஆசிரியர் பட்டியலில் அவருடைய பெயரை தவறுதலாக சேர்த்ததால் ஊதிய உயர்வுக்கு கண்ணம்மா தகுதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தேர்வாணையம் மூலமாக தமிழாசிரியர் மற்றும் இளநிலை பணியாளர் போன்ற பணிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

அவருடைய கல்வி தகுதியை ஆராயாமல் 23 ஆண்டுகள் அவரை தமிழாசிரியராக பணியாற்ற அனுமதித்தது சட்டப்படி குற்றம் என்று நீதிபதி கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சட்டவிரோதமாக தற்காலிகமாக பணியில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் சட்டத்திற்குட்பட்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |