Categories
தேசிய செய்திகள்

பொருட்களை விற்பனை செய்ய…. அமேசானுடன் ஒப்பந்தம்…. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!!

மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து கர்நாடக அரசு அமேசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கர்நாடகாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கர்நாடக அரசின் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் துறை மற்றும் கர்நாடக மாநில கிராம வாழ்வாதார மேம்பாட்டு துறை மற்றும் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் கையெழுத்தானது. இதுபற்றி பசவராஜ் பொம்மை பேசியது; தற்போதைய சூழலில் ஏழ்மை நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மேலும் கிராமப்புற மக்களை மேம்படுத்துவது மற்றும் வறுமையை ஒழிப்பது ஏழை மக்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களை முன்னேற்ற வேண்டும்.

மகளிர் சுய உதவி குழுக்கள் அமேசான் நிறுவனத்தின் டிஜிட்டல் வணிகம் வழியாக விற்பனை செய்வதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது . மேலும் இந்த முயற்சி வெற்றியை  பெற வைக்க வேண்டும்.  இந்த சுய உதவிக் குழுக்கள் மூலமாக நல்ல தரமான பொருட்களை உற்பத்தி செய்து அதில் சந்தை வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளலாம்.

கர்நாடகாவில் உள்ளவர்கள்  இந்த குழுக்கள்   மூலம் உற்பத்தி செய்யும் பொருளை தேசிய தேசிய அளவில் விற்பனை செய்ய முடியும் எனவும் கூறினார். இதனையடுத்து  பேசிய திறன் மேம்பாட்டு துறை மந்திரி நாராயண அமேசான் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தால் கிராமப்புற பெண்களின் வாழ்வு பொருளாதார ரீதியாக வளம் பெறுவதாகவும் கூறினார்.

Categories

Tech |