கடந்த மாத தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் கொரோனா பேரலையாக உருவெடுத்தது. இதனால் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. எனவே தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதிக்கு பிறகு தளர்த்தப்பட்டது. மேலும் பள்ளிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது.
இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.