பெங்களூருவில் உள்ள முக்கிய பகுதிகளான சுதந்திர பூங்கா, மைசூரு வங்கி சர்க்கிள், அனந்தராவ் சர்க்கிள், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவை பெங்களூருவின் முக்கியமான இடங்கள் என்பதால் இவ்வாறான போராட்டங்களின் போது வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட் உத்தரவின்படி பெங்களூருவில் போராட்டம், ஊர்வலம், பேரணி போன்றவற்றை நடத்துவது மற்றும் அதற்கான கட்டுப்பாடுகளை விதிப்பது போன்றவற்றிற்க்கான முழு அதிகாரம் கமிஷனர் கையில் ஒப்படைக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது. அதோடு இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கையும் கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.