ஆஸ்திரேலியா பெண்கள் V இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியினர் 3 ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர். அதில் 2ஆவது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பெண்கள் அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து பெண்கள் அணியினர் முதலில் பேட் செய்தனர்.
இங்கிலாந்து பெண்கள் அணி பேட்டிங்:
ஆஸ்திரேலியா பெண்கள் அணியினர் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்து பெண்கள் அணியினர் ரன் எடுக்க திணறினர். அதிகபட்சமாக சோபி இசில்ஸ்டோன் 32* எடுக்க அந்த அணி 45.2 ஓவர்களில் 129 ரன்னுக்கு அணைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஆஸ்திரேலியா பெண்கள் அணி பௌலிங்:
ஆஸ்திரேலியா அணி சார்பில் எல்லிஸ் பெர்ரி, தஹிலா மெக்ராத் தலா 3விக்கெட்டும், ஜெஸ் ஜோனஸ்ஸன் 2 விக்கெட்டும், அன்னபேல் சுதர்லாண்ட், அலனா கிங் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.