கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் பரிசோதனை செய்யும் இருவரில் ஒருவருக்கு தோற்று உறுதி செய்யப்படுகிறது என்ற பகீர் தகவலை அரசு வெளியிட்டுள்ளது. இதனால் கேரளாவில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு செல்வோர் தங்களது அடையாள அட்டையை காண்பித்து விட்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஹோட்டல்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் அதிலும் பார்சல் மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.