Categories
கல்வி

“கியூபா கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கு”…. அனைத்து நாடுகளுக்கும் முன்மாதிரி…. வாங்க பாக்கலாம்….!!!

கியூபா கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கு. தற்போதைய உலகில் மகிழ்ச்சியான குழந்தைகள் மற்றும் அடிப்படை கல்வி புள்ளி விவர பட்டியல் வெளியாக தொடங்கிய பின்பு முதலில் உலகத் தலைமை பீடத்தில் பின்லாந்து உள்ளது. இந்த விஷயத்தில் பின்லாந்தோடு போட்டிபோடும் நாடுகள் என்றால் அது கியூபாவும், சமீபத்திய சாதனை நாடுகளான அமெரிக்காவும், லத்தீனும் தான். கியூபாவை நாம் கண்டிப்பாக தனித்துக் குறிப்பிட வேண்டும். எந்த நல்ல விஷயம் வெளி வந்தாலும் அது சரி கிடையாது என்று தூக்கி எறியும் பல ஐரோப்பிய நாடுகள், லத்தின் தொடர்பு மூலம் கல்வியல், வகுப்பறைப் புரட்சி போன்றவற்றை பற்றி அறிவதில் கியூபா ஆர்வம் காட்டுகிறார்கள்.

கியூபாவில் ஒரு குழந்தை ஆறு வயதில் பள்ளிக்குப் போகிறது. ஆனால் அதுவரை உயர்கல்வி அமைப்புகள் அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பி குழந்தையின் பொது சுகாதாரம், உணவு மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் அடிப்படையில் உதவுகின்றன. இதன் மூலம் குழந்தைகளின் இருப்பிடம் தேடி கல்வியில் நுழைந்திடும் நாடாக கியூபா உள்ளது. கியூபாவில் ஆசிரியர் எனும் பணி பள்ளிக்கூட பணி மட்டும் கிடையாது. மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் முதல் சாதாரண விடுதி சிப்பந்தி வரை அனைவரும் நாட்டின் கல்வியின் ஈடுபடுகிறார்கள். கியூபாவில் பள்ளிக்கூட வகுப்பறைகள் சிறந்த கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

அங்கு பள்ளிக்கூடம் என்பது கற்றலாகவும், அதேசமயம் தேசிய உற்பத்தியில் பங்கேற்பதாக உள்ளது. அந்தந்த உள்ளூர் தொழில் உற்பத்தியில் ஏதாவது ஒரு அம்சத்தில் பள்ளி வகுப்பறையில் தனது கல்வி காலம் முடிந்தும் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரம் அதாவது 13 வயது தாண்டிய மாணவர்களின் தேசிய சேவையாக உற்பத்தி போன்றவற்றில் பங்கேற்பதை நடைமுறைப்படுத்துகிறது. கியூபாவில் அடிக்கடி இயற்கை சீற்றம் ஏற்படுவதால் தனது குழந்தைகளை தேசிய பேரிடர் மேளாண்மை பயிற்சியில் நேரடியாக ஈடுபடுத்துகிறது. பள்ளிக்கூடம் என்னும் கட்டடம், குழந்தைகள் மிகவும் விரும்பி போக்குவதற்கு மட்டுமல்ல, பேரிடர் காலங்களில் ஊர் பாதுகாப்பு அரணாகவும், அறுவடைக் காலங்களில் உற்பத்தி சேகரிப்பு கலன்களாகவும் ஒருங்கே செயல்படுகின்றது.

கியூபாவின் கல்வி ஏனைய நாடுகளில் மிகவும் வினோதமாக படுவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அங்கே ஒருவர் கல்வி கற்கும் அதே பகுதியில் பெரும்பாலும் பணியமர்த்த படுகிறார். கல்வி, சுகாதாரம் இவற்றில் தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டில் வேலையை முன்வைத்த கல்வி என்ற பதற்றம் கிடையாது. கியூபாவில் எழுதப்படிக்க கணக்கிட தெரிவது என்பதோடு கியூபா கல்வி நிற்பதில்லை. படிப்பது, எழுதுவது, புரிந்து கொள்வது உலகளாவிய போக்காகும். ஆனால் கியூபாவில் ஒரு குழந்தை நீச்சல் அடிக்கவும், சைக்கிள் ஓட்டவும், மரம் ஏறவும் மற்றும் தீ தடுப்புகளில் ஈடுபடுவதோடு, ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல கல்வி இறுதி ஆண்டுகளில் தேர்வை விட தேசிய பணி பங்களிப்பை அது பிரத்தியேக தேவையாக கொண்டுள்ளது.

கியூபாவில் நேரடியாக குழந்தைகளுக்கும் கல்விக்கும் என தேசிய அளவில் பட்ஜெட் தயாரித்து அதனை ராணுவத்தின் மேல் பார்வையோடு அமல்படுத்தும் நாடாக கியூபா உள்ளது. உலக வங்கி உட்பட யுனஸ்கோ, யுனிசெப் இந்த அமைப்புடன் ஒரு பைசா கூட உதவி பெறாமலே கல்வியில் தன்னிறைவு கொண்டுள்ளது. இது உலக அளவில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொருவரையும் தன்னிறைவு பெற செய்துள்ளது. ஏனென்றால் அங்கே 11 பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். உலக அளவிலான தரவரிசைப் பட்டியலில் உயர்ந்த நாடுகள் கியூபாவை கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது.

நமது சென்னை அப்போலோ மருத்துவமனை என்பது அங்கே கியூபாவில் ஒவ்வொரு குக்கிராமத்தில் செயல்படும் மக்கள் மருத்துவ அமைப்பாக செயல்படுவது என்றால் அது பொய்யல்ல. பள்ளிக்கூடங்கள் சூரியசக்தி மூலம் தனக்கு தேவையான மின்சாரத்தை தயாரித்துக் கொள்கின்றன. உள்ளூர் அளவில் மின்கலங்களை செயல்படுத்துவது, வீடுகளில் தொலைபேசி இணைப்பை பராமரிப்பது, மாமரத்து பணி, சாலை தூய்மை போன்றவற்றில் மாணவர்களின் பங்களிப்பு இல்லாத இடங்களே கிடையாது. உலக மாநாடு ஒன்றில் கொல்கத்தாவில் 2000 ஆண்டு கலந்துகொண்ட அனுபவத்தின் போது திடீர் பழுதடைந்த மின் ஒலிபெருக்கியை சரிசெய்ய ஒலிபெருக்கி காரரை எல்லோரும் தேடிக்கொண்டிருந்தபோது 12 வயது நிரம்பிய கியூபாவை சார்ந்த பிரதிநிதி மாணவர் தன்னார்வத்தோடு தன்னுடைய மின்சாதன பெட்டியோடு வேலையில் இறங்கி சற்று நேரத்தில் அதை சரி செய்தது தெரியப்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

இது அந்த மாநாட்டின் சிறப்பாக அமைந்தது என்பது குறிப்பிட வேண்டியவை. இளைஞர்கள் மருத்துவர்கள் ஆகி நேரடியாக தங்களின் பகுதி தெருக்களில் பணியாற்றும் புரட்சிகர மருத்துவர்கள் அமைப்பு போல, கியூபாவின் செயல்படும் பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் மாணவர்களின் பங்களிப்பினை செய்வதை தனியே அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளனர் சில தன்னார்வ குழுக்கள். கியூபா குழந்தைகளிடையே நடத்திய பிரத்தியேக திறனாய்வு ஆய்வின்போது எழுதுதல், கற்பித்தல், வாசித்தல், அறிவியல் கணக்கிடுதல் இவற்றோடு உலக அளவில் இசைக் கருவிகளை வாசித்தல், விளையாட்டு, நோய் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றிலும் சிறந்தவர்களாக இருப்பதை ஒரு ஆய்வில் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல அந்த நாடு ஒரு கம்யூனிச நாடு என்பதால் உலகிலிருந்து பல்வேறு செய்திகள், தகவல்கள் நாட்டின் உள்ளே நுழையாமல் தடுக்கப்படுவதாக ஒரு பிரச்சாரமும் உண்டு. ஆனால் ஆச்சரியமான வகையில் கியூபா மாணவர்கள் உலக அளவில் உலக அரசியல், அறிவியல் துறை போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் மின்னணு சாதனங்களை பள்ளிகளில் உபரி நேரங்களில் தயாரிக்க மாணவர்கள் அதிகம் ஈடுபடுவதாக அதனை ஒரு கல்வி மாதிரியாக முன்வைப்பவர்கள் உண்டு. ஆனால் அது கியூபா மாதிரி என்பதை குறிப்பிட வேண்டியது உள்ளது. எதுவாக இருந்தாலும் கியூபா கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கு.

Categories

Tech |