தமிழ்நாட்டில் NMMS மற்றும் NTSE அரசுத் தேர்வுகளுக்கு தேர்வு பணி எழுத செல்லக்கூடிய அரசு பணியாளர்களுக்கும், துறை தேர்வு எழுதவுள்ள அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு விடுப்பு அளிப்பது தொடர்பில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு சார்பாக பல சிறப்பு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி மாணவர்களது கற்கக்கூடிய திறனை மேம்படுத்தக்கூடிய வகையில், NMMS மற்றும் NTSE ஆகிய அரசு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பணிக்கு அரசு பணியாளர்களும், ஆசிரியர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த தேர்வுகள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடக்கும். அதனை சரிசெய்ய அன்றைய தினம் பணி காலமாக கருதப்பட வேண்டும் என்று அரசு பணியாளர்கள் சார்பாக மனுக்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்படி தமிழ்நாட்டின் விதி 9 (6) (b) (ii) படி, அரசு பணியாளர்களும், ஆசிரியர்களும் துறை தேர்வு எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அரசு பணியாளர்கள் எழுதக்கூடிய தேர்வு நாள் பணிக்காலமாக கருதப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று அரசுத் தேர்வு பணி எழுதச் செல்லக்கூடிய அரசு பணியாளர்களுக்கு அந்த நாளை ஈடுபடுத்துவதற்காக மற்றொரு நாள் சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்ட்டிருக்கிறது.
எனினும், அரசு பணி தேர்வு எழுத செல்லும் அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க அரசு விதிகளில் அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இது அரச பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.