அமெரிக்க அரசு, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க ஈரான் மீதுள்ள பொருளாதார தடைகளை ரத்து செய்திருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 2018 ஆம் வருடத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த சமயத்தில், ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு விலகினார். மேலும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முக்கியமான சில நிபந்தனைகளைப் புறக்கணித்து விட்டது.
எனவே, இருநாடுகளுக்கும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று முயன்று வருகிறார். எனினும், ஈரான் தங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்க வேண்டும். அப்போது தான் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
எனவே, அமெரிக்கா ஈரான் மீது உள்ள பொருளாதார தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ட்ரம்ப் விதித்த பொருளாதாரத் தடைகள், ஜோ பைடனால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நடத்திய பேச்சு வார்த்தைக்கு ஒரு முக்கிய தீர்வு கிடைத்திருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.