Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவங்க பாகிஸ்தான் வரலன்னா ஆச்சரியம் இல்ல”…. கிரிக்கெட் பவுலர் சொன்ன சீக்ரெட்….!!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1988-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட், மூன்று டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதேசமயம் நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் முழு உறுதி அளித்த நிலையில் அந்நாட்டிற்கு சென்று விளையாட உள்ளது.

ஆனால் சில வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பாகிஸ்தானுக்கு சில வீரர்கள் பயணம் செய்யவில்லை என்றால் நான் ஆச்சரியம் அடைய மாட்டேன் என்று கூறியுள்ளார். அதாவது, “கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் போர்டு சங்கம் ஆகியவை ஏராளமான விஷயங்களில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளது.

எனவே வீரர்களும் நம்பிக்கையாக உள்ளனர். இருப்பினும் சில வீரர்கள் கவலையில் இருக்கின்றனர். எனவே வீரர்கள் சிலர் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள வில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இவ்வாறு வீரர்கள் முடிவு செய்தால் ஒவ்வொருவருடைய முடிவுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |