இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இலங்கை வெளியுறவு மந்திரி பெரீஸ் டெல்லி வருகை தர உள்ளார். அப்போது அவர் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தவலையும் சந்தித்து பெரீஸ் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை கடலோர காவல்படையும், கடற்படையும் தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்கிறபோது சிறை பிடித்து செல்வதால் எழுகின்ற பிரச்சினைகள் குறித்தும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.