Categories
உலக செய்திகள்

தலிபான்கள் ஆட்சியில் சோகம்…. ஊடக நிறுவனங்களுக்கு செக்…. அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு நாட்டில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 318 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த வியாழக்கிழமை அன்று பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், “தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 132 வானொலி நிலையங்கள், 49 ஆன்லைன் ஊடகங்கள், 51 தொலைக்காட்சி நிலையங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டனர்.

எனவே தற்போது 114-ல் வெறும் 20 செய்தித்தாள்கள் மட்டுமே அந்நாட்டில் செயல்பாட்டில் இருக்கிறது. நாட்டில் உள்ள நெருக்கடி காரணமாக செய்திதாள்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலிபான் ஆட்சிக்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் 5,069 பேர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 2,334 பத்திரிக்கையாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். அதில் வேலை இழந்தவர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். ஆனால் தற்போது 243 பெண்கள் மட்டுமே ஊடகத்தில் பணிபுரிகின்றனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |