ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் எண்ணம், செயலில் புதிய உத்வேகம் இருக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று சற்று எச்சரிக்கையுடன் எதையும் செய்வது நன்மையை கொடுக்கும்.
தொழில் வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடு படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அடுத்தவர்களுக்காக விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உத்யோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனதில் ஏதேனும் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்