Categories
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு…!! வாகன ஓட்டிகள் அவதி..!!

இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக  மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் .

இமாச்சல பிரதேச தலைநகர்  சிம்லாவில் மிகக் குறைந்த வெப்பநிலையை இந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அங்கு மைனஸ்  2.1  டிகிரி  செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

கடந்த  24  மணி நேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் குளிர் தீவிரமடைந்துள்ள நிலையில் லாஹவுல், ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள கீலாங்கில்  12.5 டிகிரி செல்சியசாக  குறைந்துள்ளது. ஆப்பிள் தோட்டங்களுக்கு பிரபலமான கல்பாவில் மைனஸ் 7.0  டிகிரி செல்சியஸ்வெப்பநிலை  பதிவாகியுள்ளது. சுற்றுலா தளமான குப்ரியில்  கடந்த  24  மணி நேரத்தில் 60.0 சென்டிமீட்டர் பனிப்பொழிவு  பதிவாகியுள்ளது.

இந்த பனிப்பொழிவு தான் மாநிலத்திலேயே அதிகபட்சமாக பனிப்பொழிவாகும். இதற்கிடையில் சோபாவில் 45.7 சென்டிமீட்டர் மற்றும் சிம்லாவில் 32.6 சென்டிமீட்டர் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்தப்பனிப்பொழிவையும்  பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் இமாச்சல பிரதேசத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் கடும் பனிப்பொழிவு காரணமாக  சாலைகளை பனி  மூடியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் . மேலும், இந்த  பனிப்பொழிவு  நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |