Categories
தேசிய செய்திகள்

பாஜகவின் முதல் எம்பி காலமானார்…. பெரும் சோகம்….!!!!

பாஜகவின் முதல் மக்களவை உறுப்பினரான பழம்பெரும் தலைவர் ஜங்கா ரெட்டி(87) காலமானார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவின் ஹனுமகொண்டா நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவை தோற்கடித்து பாஜக சார்பாக முதன் முறையாக எம்பியாக தேர்வானவர். அந்த நாடாளுமன்றம் தேர்தலின் போது பா.ஜ.க சார்பாக தேர்வு செய்யப்பட்ட 2 மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் பிரதமர் மோடி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஜங்கா ரெட்டி தன் வாழ்க்கையை பொது சேவைக்காகவே அர்ப்பணித்தவர் ஆவார். மேலும் ஜனசங்கம் மற்றும் பாஜகவை வெற்றியின் புது உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் அவர் ஒரு அங்கமாக செயல்பட்டார். பல பேரின் மனதிலும் இடம் பிடித்தார். அவரது மறைவு அனைவருக்கும் வருத்தம் அளிக்கிறது. அவரது மகனிடம் பேசி ஆறுதல் சொன்னேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |