நடிகை மீனா தனது அம்மாவுடன் இணைத்து எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ இணையத்ததில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். இவர் திருமணத்திற்குப் பின்பு சினிமாத் துறையில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார்.
நடிகை மீனா தற்போது மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாள பாடங்களிலும் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகை மீனா தனது மகளுடன் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை மீனா தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார். அதேபோல் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.