தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் அமைந்துள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் ராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமானுஜரின் 1,000 வது பிறந்தநாள் நிறைவை ஒட்டி, ஐதராபாத்தில் விமான நிலையம் அருகே 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நினைவிடத்தில், 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி நேற்று மாலை திறந்துவைத்தார்.
செம்பு (80 %) வெள்ளி, தங்கம்,டைட்டானியம்,ஆகிய ஐம்பொன்னால் சீனாவின் ஏரோசன் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூபாய் 135 கோடி செலவில் சிலை உருவாக்கியுள்ளது. படேல் சிலையும் “மேட் இன் சீனா” என சொல்லப்படுகிறது.