கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், லதா மங்கேஷ்கர் மறைந்ததை அடுத்து தேசிய அளவில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது .
மேலும் ,நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்த திட்டமிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.