Categories
சினிமா தமிழ் சினிமா

“OMG” அஜித் படத்துக்கு தனுஷ் பட பெயரா….? இயக்குனரின் பதிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். 

H.வினோத் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வலிமை”. இப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னை அறிந்தால்’.

இந்த திரைப்படம் பல விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது. இப்படம் வெளியாகி 7 வருடங்கள் முடிவடைந்துள்ளது. கவுதம் மேனன் இப்படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். “அந்த பதிவில் அவர் இந்த திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர்கள் என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும்  அறிய தருகிறோம் Sathya Dev ” என்று கூறினார்.

Categories

Tech |