கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாட்டின் நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கொடுக்க வேண்டுமென்று பணியாளர் சங்க தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கிவரும் நியாயவிலை கடைகள் மக்களுக்கு குறைவான விலையில் மளிகைப் பொருட்களும் அரிசியும் குடும்ப அட்டை அடிப்படையில் வழங்கிக்கொண்டிருக்கிறது. அதன்படி, இந்த துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை வழங்குமாறு தமிழ் நாட்டின் அரசு ஊழியர்கள் சங்க தலைவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
நியாய விலை கடை ஊழியர்களுக்கு இதற்கு முன் 14% அகவிலைப்படி வழங்கப்பட்டது. அதன்பிறகு, அரசு அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படியானது 31% அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதை செயல்படுத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பணியாளர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த 14 சதவீத அகவிலைப்படியும் தற்போதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் பணியாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி தமிழ்நாட்டின் பணியாளர்கள் சங்க தலைவரான கு.சுப்ரமணியன் தெரிவித்திருப்பதாவது, அகவிலைப்படி தொடர்பில் அரசு அலுவலர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள், அரசாங்கம் அதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பித்த பின்பே அகவிலைப்படி வழங்கப்படும் என்று கூறிவிட்டனர். அரசாங்கம் இதனை கவனத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.