உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது மகளை சிறுத்தைப்புலி ஒன்று கடித்து எடுத்துச்செல்ல முயன்றுள்ளது. அப்போது அதைக் கண்ட அந்ததாய் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது குழந்தையின் தாய் அந்த சிறுத்தை புலியை கட்டையை வைத்து அடித்து துரத்தியதாக தெரிகிறது .
இதில் சிறுத்தை இழுத்துச் சென்றதில்அந்த சிறுமிக்கு கை மற்றும் முகத்தில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீரத்தாயின் செயல் குறித்து இணையதள வழியே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.