Categories
உலக செய்திகள்

என்னதான் காரணம்….? எல்லைக்குள் அனுமதிக்காத சீனா….!! மருத்துவ மாணவர்களின் கதி என்ன….?

நேபாள நாட்டு மருத்துவ மாணவர்களை சீனா தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி அளிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீன நாட்டில் மருத்துவத்திற்கு படிக்கும் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 225 மாணவர்களுக்கு பட்டப்படிப்பை முடிக்க பெய்ஜிங் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தி ஹிமாலயன் டைம்ஸ் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் வெரோ செல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

ஆனாலும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் சான்றிதழை வைத்து இருக்காத காரணத்தால் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 225 மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் நாட்டுக்குள் நுழைய சீனா அனுமதி அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது சம்பந்தமாக வெளியாகியுள்ள செய்தியில், சீன நாட்டில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்களை நேபாளத்தில் இன்டர்ன்ஷிப் செய்ய அனுமதிக்கலாம் என்ற முடிவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி நேபாள அரசு எடுத்துள்ளது. இருப்பினும் இதற்கு நேபாள மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு காரணம் மாணவர்களின் ஆன்லைன் நடைமுறை படிப்புகளை அங்கீகரிக்க முடியாது என நேபாள மருத்துவ கவுன்சில் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும் இது குறித்து நேபாள மருத்துவ கவுன்சிலின் தலைவர் பகவான் கொய்ராலா கூறியதாவது, “கோட்பாட்டு பாடங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் அங்கீகரிக்கப்படும். ஆனால் நடைமுறை வகுப்புகளுக்கு இதனை அங்கீகரிக்கப்படாது. மேலும் மாணவர்களின் கல்வி தரத்திற்காக நேரில் வகுப்புகளை எடுக்க வேண்டும். கடந்த 8 மாதங்களாக மாணவர்கள் போராட்டத்தை நடத்தினாலும் எந்த நாட்டு அரசும் அவர்களை கண்டுகொள்ளவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |