மடகாஸ்கர் தீவில் வீசும் பட்சிராய் புயலானது அனா புயலை விட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் பட்சிராய் என்ற புயல் தாக்கியது. இந்தப் புயலால் நிலச்சரிவு, கனமழை மற்றும் சூறாவளி காற்று போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தங்குவதற்கு இடமின்றி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த புயலானது மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏறத்தாழ 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஜிம்பாப்வே, மொசாம்பிக் போன்ற நாடுகளை தாக்கிய அனா புயலை விட பட்சிராய் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.