வாடகை கேட்ட உரிமையாளரை தந்தை, மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உப்புத்துறை பகுதியை சேர்ந்த விவசாயி சன்னிக்கு சொந்தமான வீட்டில் அதே பகுதியை சேர்ந்த குஞ்சுமோன் ஜார்ஜ் மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வாடகை தராததால் வீட்டு உரிமையாளர் வாடகை தாருங்கள் இல்லையெனில் வீட்டை பூட்டி சாவியை தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த குஞ்சுமோன் குடும்பத்தினர் வீட்டின் உரிமையாளர் சன்னியையும் அவரது மகனையும் அரிவாளால் வெட்டினர். இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் உப்புத்துறை போலீசார் குஞ்சுமோன் ஜார்ஜ், அவர் மகன் சஞ்சய் மற்றும் உறவினர் பொன்னி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.