அய்யலூர் பேரூராட்சி தேர்தலில் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் தங்களுடைய மனைவிகளை போட்டியாளர்களாக ஒரே வார்டில் களத்தில் இறக்கியுள்ளனர். அதன்படி 3-வது வார்டில் அதிமுக சார்பில் மணிகண்டனின் மனைவி கலைச்செல்வியும், திமுக சார்பில் மணிகண்டனின் உடன்பிறந்த சகோதரர் கார்த்திகேயன் மனைவி மாலாவும் களத்தில் உள்ளனர். அதேபோல் 2-வது வார்டில் கனகராஜன் என்பவரது மனைவி நாகலட்சுமி அதிமுக சார்பிலும், கனகராஜன் உடன்பிறந்த சகோதரன் நாகராஜன் மனைவி நித்யா திமுக சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த சில தேர்தல்களில் இந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நாகராஜன் தரப்பு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த முறை அந்த வார்டு திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாகராஜன் தரப்பு சுயேட்சை அல்லது திமுகவிலிருந்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது.