Categories
சினிமா

“தயவு செஞ்சு என்கிட்ட இத பத்தி மட்டும் பேசாதீங்க”…. நண்பர்களுக்கு திடீரென கண்டிஷன் போட்ட தனுஷ்….!!!

தனுஷ் தன்னிடம் பேசுபவர்களிடம் புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.

நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யாதனுஷும் விவாகரத்து செய்யப்போவதாக சென்ற இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர். இவர்கள் இருவரும் சேர்வார்கள் என்று நினைத்தவர்களுக்கு எதிர்மறையாக தினம் தினம் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா குடும்பத்துக்காக இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று கூறிய போதிலும் தனுஷ், அது நடக்காது என்று கூறியுள்ளாராம். குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகிய நான் இப்போது தான் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார் என செய்தி வெளிவந்திருக்கிறது.

குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம் என கூறுவதால் தனுஷ் ஷூட்டிங் என ஹைதராபாத்திலேயே இருக்கிறாராம். நண்பர்கள் இதை பற்றி பேசினால் தனுஷ் மிகவும் கோபமாக பேசுகிறாராம். இனி என்னிடம் இதைப் பற்றி பேசாதீர்கள் என தனுஷ் கண்டிஷன் போட்டிருக்கிறாராம். தனுஷ் இனிமேல் சினிமாவில் முழுவதுமாக கவனம் செலுத்த போகிறாராம். முழுக்க முழுக்க சினிமா தான் என் வேலை என கூறி இருக்கிறாராம்.

Categories

Tech |