Categories
தேசிய செய்திகள்

கல்வி நிறுவனங்கள் கூறும்…. சீருடையை மட்டுமே அணியவும்….  மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!!

மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் கூறும் சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது .

கோலார்  மாவட்டம்  முல்பாகல்  அருகே உள்ள பாலேசங்கப்பா அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான முஸ்லிம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியை  உமாதேவி முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு தொழுகை நடத்துவதற்கு வசதியாக பள்ளி வளாகத்திலேயே ஒரு அறை அமைத்து தொழுகைக்கு ஏற்பாடு செய்தார், மேலும் அவர் பள்ளி நேரத்திலேயே தொழுகை நடத்தவும் அனுமதி அளித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் கல்வித்துறை தலைமை ஆசிரியையை  உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டது.

இதேபோல் கர்நாடகாவில்  உள்ள  உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி .யூ  கல்லூரியில்  முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்க்கு  கல்லூரி முதல்வர் சீருடையை தவிர வேறு ஆடை அணியக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை மீறி முஸ்லிம் மாணவ மாணவிகள் பர்தா அணிந்து வந்துள்ளனர். இதனால் கல்லூரி முதல்வர் மாணவிகளை கல்லூரி  உள்ளே அனுமதிக்கவில்லை. நுழைவு வாயிலில் மாணவியர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இந்த விவகாரம் கர்நாடகா மற்றுமன்று நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது  தொடர்பாக கர்நாடகா ஐகோர்ட்டில் விசாரணை தொடரப்பட்டுள்ளது. மேலும் அந்த வழக்கு 8 ம்  தேதி விசாரணைக்கு வருகிறது .

முஸ்லிம் மாணவர்கள் பர்தா அணிந்து வந்த நிலையில் இந்து மாணவர்கள் அனைவரும் காவி துண்டு அணிந்து கொண்டு கல்லூரிக்கு பேரணியாக வந்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது இதன் காரணமாக கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுபர்கள் மீது வழக்கு செய்யப்படும்.

இந்நிலையில் கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் அந்த கல்லூரியின் நிர்வாகம் சீருடையில் முடிவு செய்யும்  சீருடையை மாணவர்கள் அணிந்து வருவது கட்டாயம். இது சமத்துவம் , ஒருமைப்பாட்டை காத்து பொது அமைதிக்கு  பங்கம் ஏற்படாத வகையில் மாணவர்கள் உடை அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரி  நிர்வாகம் முடிவு செய்யும் சீருடையை மாணவர்கள் அணிய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |