Categories
மாநில செய்திகள்

தமிழக 10th, +2 மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை 10, 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம்பெறக்கூடாது.

விடைத்தாளில் தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம் மட்டும் இடம் பெற வேண்டும். இரண்டு மாணவர்கள் மட்டும் தங்கள் விடைத்தாள்களில் அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள நிரந்தர பதிவு எண்ணை, தேர்வு எண்ணாக குறிப்பிட வேண்டும். தேர்வு அறை ஒன்றுக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |