சென்னையில் இருந்து அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூரை நோக்கி புறப்பட்டது. இதையடுத்து பேருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட டிரைவர் முயற்சி செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்துக்குள் சிக்கித் தவித்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயங்களுடன் 20 பேரும், லேசான காயங்களுடன் 22 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.