மலேசியாவிலிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் சிங்கப்பூருக்கு 900 கிராம் எடையுடைய போதைப்பொருட்களை கடத்திய இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் கிஷோர் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரொருவர் வசித்து வந்துள்ளார். இவர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மோட்டார் சைக்கிள் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 900 கிராம் எடையுள்ள ஹெராயின் என்ற போதைப்பொருளை கடத்தியுள்ளார். அதனை கிஷோர் சிங்கப்பூரில் வசித்து வரும் கியான் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளார்கள். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கிஷோருக்கு மரண தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் கியான் என்பவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.