Categories
சினிமா தமிழ் சினிமா

வில்லனாக மிரட்டிய அஜித்தின் ”மங்காத்தா”…. உண்மையாக எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா….?

‘மங்காத்தா’ திரைப்படம் உலக அளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மங்காத்தா”. அஜித் மற்றும் அர்ஜுன் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வெற்றி அடைந்தது. மேலும், இந்த படத்தில் வைபவ், மகத், பிரேம்ஜி மற்றும் அஸ்வின் ஆகியோர் நடித்திருந்தனர்.

Ajith for Mankatha 2 - மீண்டும் மங்காத்தா அஜித்

இந்நிலையில், மிகப்பெரிய ஹிட்டான இந்த திரைப்படம் உலக அளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலக அளவில் 79 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் இந்த படம்தான் முதலில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |