நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்று மணிமுத்தாறு. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு எந்த பஞ்சமும் இருக்காது. குற்றாலத்தை தொடர்ந்து மணிமுத்தாறில் உள்ள அருவி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து மணிமுத்தாறில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பயணிகள் குளித்துக் கொள்ளலாம் என வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.