கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 9 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்லாதது இன்னும் வலிக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற 9 ஆவது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துள்ளார். இவருடைய அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 9 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்றுள்ளது. இந்த விளையாட்டில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதனை தற்போது நினைவுகூர்ந்த விராட்கோலி அது இன்னும் வலிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அதில் போதுமானதாக நாங்கள் விளையாட வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த சுற்றில் ஒரு கேப்டனாக வெற்றி பெறாதது என்னை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.