Categories
தேசிய செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல்…. கூடுதல் தளர்வுகளை அளித்த…. இந்திய தேர்தல் ஆணையம்…!!!!

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களில் தேர்தல் தொடர்பாக மேலும் பல தளர்வுகளை இன்று அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தல் வருகிற 10-ஆம் தேதி முதல் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா  3-வது அலை பரவி வருவதால் இந்த பிரச்சாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இந்த நிலையில் முக்கியமாக வாகன பேரணிகள், ரோட் ஷோக்கள், பாதயாத்திரை, ஊர்வலங்கள் மற்றும் பிரச்சார கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் தொடர்பான கூடுதல் தளர்வுகளை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பை வெளியுட்டுள்ளது.அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் உட்புற அரங்குகளின் மொத்த கொள்ளளவில் அதிகபட்சமாக 50 சதவீதமாகவும் மற்றும் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் திறந்தவெளி பிரசார பொதுக்கூட்டங்களில் மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 30 சதவீதம் எனகலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும்  என்று  கூறியுள்ளது.

இதனைப்போன்று முன்பு போலவே 20 பேர் வரை  வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதற்கு  அனுமதி வழங்கியுள்ளது.பிரச்சாரத்திற்கான தடை முன்பு போலவே இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தொடரும், மற்றும் பாதயாத்திரை, ரோடு ஷோ, சைக்கிள் மற்றும் வாகனப் பேரணிகளுக்கான தடையையும்  நீட்டித்துள்ளது.கொரோனா தொற்றின் வேகம்  சீராக குறைந்து வருவதாலும் , அதிகரித்து வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவினை  எடுத்துள்ளதாக  தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

 

Categories

Tech |