சென்னை தியாகராயநகர் பாண்டிபஜார் சாலையில் தனியார் வளாகம் ஒன்று இருக்கிறது. இதில் பிரபல ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஜவுளி மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் திடீரென்று தீ பற்றியதால் அங்குள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கட்டிடத்தின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இதன் மூலமாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வணிக வளாகத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீ தனது குடும்பத்துடன் வணிக வளாகத்திற்குள் சிக்கியுள்ளார். 3-வது தளத்தில் 70 பேர் இருந்ததாகவும், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் தாங்கள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் ஸ்ரீ கூறியுள்ளார்.