தமிழகத்தில் அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1, கணினி பயிற்றுனர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வுக் கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியமானது வெளியிட்டது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கணினி தேர்வு நகராட்சித் தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதி நடைபெறாது எனவும், 19ஆம் தேதிக்கு பதில் 20ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி ஆசிரியர்கள் நிலை 1 போன்ற காலிப் பணிகளுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை காலை, மாலை என இருவேளைகளிலும் 19ஆம் தேதி தவிர தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 12ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் தேர்விற்கான நுழைவு சீட்டுகளை 5ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.