Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரை இழந்த 5 வயது சிறுமி…. திருமணமானவர் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். அதே பகுதியில் தாய் மற்றும் தந்தையை இழந்த 5 வயது சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் அந்த 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பாட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழே சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |