Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 81 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுரை சாலைகள் தாசில்தார் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜீவ்காந்தி என்பவர் உரிய ஆவணம் இன்றி  81 ஆயிரம் ரூபாய் பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |