சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோலம் போட்ட 5 பேரை தடுத்து அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் விடுதலை செய்தனர்
சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது வீட்டின் முன்பு சாலையோரம் ரங்கோலி கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, NO TO CAA என எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர். கலர் பொடி ஓன்று தான் கோலத்தில் இல்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆண் 4 பெண்கள் என 5 பேரை தடுத்து நிறுத்திய காவல்துறை, அவர்களை அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை விடுதலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Modi police is now arresting students for making rangoli https://t.co/jUmqc6j5Ma
— Kapil (@kapsology) December 29, 2019
In a first, 5 arrested by #Chennai police for carrying out a Rangoli/Kolam protest against #CAA_NRC
New benchmark by city police #CAA_NRC_Protests #NRC_CAA_Protest pic.twitter.com/A20jAcGWEm
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) December 29, 2019
https://twitter.com/GirishNaught/status/1211148250473848832
5 detained in chennai for expressing their dissent against CAA through rangoli #CAAProtests #CAA_NRCProtests pic.twitter.com/aKAd03kyKy
— Poornima Murali (@nimumurali) December 29, 2019
All who were detained for Rangoli protest in Chennai has been released by Chennai police. #CAA_NRC_NPR pic.twitter.com/x0dh9xnS5M
— Mugilan Chandrakumar (@Mugilan__C) December 29, 2019