பிரபல நடிகரான ராகுல் ராமகிருஷ்ணா சினிமா துறையில் இருந்து விலகுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
2017ஆம் வருடம் திரைக்கு வந்த படம் “அர்ஜுன் ரெட்டி”. இத்திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு தோழனாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ராகுல் ராமகிருஷ்ணா பிரபலமானார். இப்படத்திற்கு அடுத்து “அல வைகுந்தபுரமுலோ”, “ஜதிரத்னலு ஸ்கைலேப்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜமவுலி இயக்குகின்ற ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்திருக்கிறார்.
தற்போது ராகுல் ராமகிருஷ்ணா சினிமா துறையில் இருந்து விலகுவதாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது,” 2022ஆம் ஆண்டு தான் நான் படத்தில் நடிப்பது கடைசி ஆண்டாக இருக்கும். இனி நான் நடிக்க மாட்டேன். இதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை” என பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.