பராமரிப்பு பணிகள் காரணமாக 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மூர்மார்க்கெட்-ஆவடி, நள்ளிரவு 12:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்(43001), கடற்கரை- அரக்கோணம், இரவு 1:20 மணிக்கு இயக்கப்படும் ரயில்(43801) இன்றும், நாளையும், அரக்கோணம்-கடற்கரை காலை 4 மணிக்கு இயக்கப்படும் ரயில்(43802) இன்று ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம்-வேளச்சேரி(43932), காலை 4:00 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை பாதி நேரம் ரத்து செய்யப்படும்.
Categories