குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நேற்று சென்னை ஆலந்தூரில் கண்டன பேரணி நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பேரணியில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி ஆளுநர் மாளிகையை நோக்கி செல்வதாக இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததும் ஆலந்தூர் நீதிமன்றம் அருகே பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்தநிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.