Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின விழாவில்…. அம்பேத்கர் உருவப்படம் கட்டாயம்…. கர்நாடகா ஹைகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

 மாநிலம் முழுவதும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கட்டாயம் அம்பேத்கர்  உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று  ஐகோர்ட் நீதிபதி  தெரிவித்துள்ளார்.

குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று அரசு விழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த ஜனவரி 26 ஆம் தேதியும் குடியரசு தின அரசு நிகழ்ச்சிகளில் அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதைப்போல் ராய்ச்சூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், குடியரசு தினத்தன்று அம்பேத்கரின்  உருவப்படத்தை ஊழியர்கள் வைத்தனர், ஆனால் அதில் கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா அவரின் உருவப்படத்தை அப்புறப்படுத்தினால் தான் தேசிய கொடியை ஏற்றுவதாக கூறிவந்தார். அவரது உத்தரவின்பேரில், அம்பேத்கரின் உருவப்படத்தை ஊழியர்கள் அகற்றின பின்பு நீதிபதி தேசிய கொடியை ஏற்றினார்.

இந்நிலையில் நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியிடம்  மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று  ஐகோர்ட் பதிவாளர் சிவசங்கர கவுடா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அதில் அம்பேத்கரை இழிவு படுத்தும் நோக்கில் அந்த கோர்ட்  நீதிபதி செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் இவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் ,அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஹைகோர்ட் தலைமை நீதிபதி  ரிதுராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ,தாலுகா அலுவலங்களில் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் கொண்டாடும் போது கட்டாயம் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று  உத்தரவிடப் பட்டுள்ளது.

Categories

Tech |