Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டரை வட்டாட்சியர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பச்சைமடம் பகுதியில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ,கிராம நிர்வாக அலுவலர்  சீனிவாசன், உதவியாளர் சீனிராஜ் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மண் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அந்த சமயம்  அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அதன்பின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தியது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்தி விட்டு தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |